சாமிநாதபுரம் அருகே தனியார் மில் காட்டில் பெண் சடலம் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சாமிநாதபுரம் போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி வெள்ளைத்தாய் (51) என்பதும், தனியார் மில்லில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் மே 14 அன்று வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.