திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் நவம்பர் 11-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பு மற்றும் நிதி குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.