பழனி அருகே அண்ணாநகரில் இன்று அதிகாலை 4:20 மணியளவில் வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து சண்முகம் என்பவரின் மளிகைக் கடையின் கதவுகளை தள்ளி சேதப்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. யானையின் சத்தத்தால் வெளியே வந்த மக்களை கண்டதும் அது மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.