பழனி: கால்நடை கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு

67பார்த்தது
பழனி: கால்நடை கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு
மத்திய அரசு சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதையொட்டி கால்நடைத்துறை சார்பில் வீடு, தோட்டம், பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி, நாய், குதிரை, வாத்து என விலங்கு, பறவை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி நாட்டின் 21-வது கால்நடை கணக்கெடுப்பும் பணி நடந்து வருகிறது. இதற்காக செல்போனில் தனி செயலி வடிவமைக்கப்பட்டு கால்நடைகள் குறித்த விவரங்கள் அதில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

பழனி, திண்டுக்கல் என கோட்ட அளவில் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கால்நடை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பு பணி இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ளது. எனினும் இந்த மாதம் இறுதி வரை கணக்கெடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கால்நடை கணக்கெடுப்பு பணி முழுமை பெறும் என்றார்.

தொடர்புடைய செய்தி