திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதியில் பெத்த நாயக்கன்பட்டி, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கம் தொடங்கின. பழனி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக கழக செயலாளர் மற்றும் எம்எல்ஏ I. P. செந்தில்குமார் பேருந்துகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கிளை மேலாளர்கள், ஊழியர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.