பழனி: பைபாஸ் சாலையில் குப்பை எம். எல். ஏ ஆய்வு

4பார்த்தது
பழனி: பைபாஸ் சாலையில் குப்பை எம். எல். ஏ ஆய்வு
பழனி அருகே சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் நீண்ட நாட்களாக குப்பைகள் குவிந்து சுகாதாரக் கேடு, துர்நாற்றம், கொசுத் தொல்லை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். புதிய எம்.எல்.ஏ ரவி மனோகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும், மீண்டும் குப்பை கொட்டுவதைத் தடுக்க தனது சொந்தச் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.