பழனி: 35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரோப்கார் சேவை

1353பார்த்தது
பழனி: 35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரோப்கார் சேவை
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார், 35 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 20, 2025 முதல் மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இருக்கைகள், சக்கரங்கள், பேரிங்குகள், ரப்பர் புஷ்கள் புதியதாக மாற்றப்பட்டு, வடக்கயிறு மற்றும் மோட்டார்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை நாட்களில் ரோப்கார் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். கோவில் நிர்வாகம், பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் முடிந்ததும் ரோப்கார் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி