திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென வாகனத்தின் முன் வந்து ஓட்டுநரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரள சுற்றுலாப் பயணிகள் சென்ற டெம்போ ட்ராவலர் வேனை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி தப்பிய ஓட்டுநர், யானை வேலி உடைத்து செல்ல முயன்றபோது மீண்டும் துரத்தப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணிக்கவும், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.