தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், "எங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 5,000 வந்திருக்கிறது, முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்கள்" என மக்கள் தெரிவித்த மகிழ்ச்சியை அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். முதலமைச்சர் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பச்சையாறு அணைத்திட்டம், புதிய பழநி மாவட்டம் உருவாக்குதல், கறிக்கோழி பண்ணை தொழிலாளர்களுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.