பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக, வரும் மே 22, 2026 அன்று ரோப்கார் சேவை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் ரோப்கார் சேவையைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக வின்ச் மற்றும் படிப்பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.