பழனி அருகே சண்முக நதி பாலத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளதால், பெருமளவில் தண்ணீர் வீணாகி வருகிறது. குழாயிலிருந்து அதிக வேகத்தில் வெளியேறும் தண்ணீரால் பாலம் அருகிலுள்ள சாலை கடுமையாக அரித்து, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. உடைந்த குடிநீர் குழாயையும் சேதமடைந்த சாலையையும் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.