பழனி: இளம்பெண் கொலை.. தாய், கள்ளக்காதலன் கைது

6பார்த்தது
பழனி: இளம்பெண் கொலை.. தாய், கள்ளக்காதலன் கைது
பழனியில், கீதா(25) தனது வீட்டின் முன் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கீதாவின் தாய் ஹெலன்ஷீபா மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவுக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது போலீசில் கொடுத்த புகாரை திரும்பப் பெற கீதாவை இருவரும் வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி