பழனி: பெண்களிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

1401பார்த்தது
பழனி: பெண்களிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி
பழனி திருஆவினன்குடி கோவிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டு, ரகசியமாக ஆபாச வீடியோ பதிவு செய்ததாக கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரது செல்போனில் பெண்களை ரகசியமாகப் பதிவு செய்த வீடியோக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி