கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்ட் சாலை, சீனிவாசபுரம், உகாரத்தேநகா, தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அவற்றை மதுபானக் கூடமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.