பழனி புது தாராபுரம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டில் காலை, மாலை நேரங்களில் அதிக நேரம் பொதுமக்கள் காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர். பழனியை புதுதாராபுரம் ரோடு சத்யா நகர் பகுதி - ரயில்வே கிராசிங் உள்ளது. இப்பகுதியில் ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும் போது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. காலை, மாலை நேரத்தில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பள்ளி, அலுவலகம், கல்லூரி செல்பவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. உயிருக்கும் போராடும் நோயாளிகள் நிலைமை சிரமத்திற்கு உள்ளாகிறது. இங்கு மேம்பாலப் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.