பழனியில் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி

71பார்த்தது
பழனியில் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
கீரனூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருபவர் திருக்குமரன் (வயது 54). இவர் பழனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். திருக்குமரனுக்கு குடும்ப பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருக்குமரன், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச் சைக்காக பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி