பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

83பார்த்தது
பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி. முருகன் அவர்கள் வலியுறுத்தலின்படி தலைமையில், ஆய்வாளர் லாவண்யா, காவலர்கள் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இணைந்து பழனியில் உள்ள சர்ஜிகல் கடைகள் மற்றும் சயின்டிபிக் சப்ளையர்ஸ் கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை நடத்தினர். 

மேலும் பழனி மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவற்றை எந்தவித உரிமம் இன்றி கள்ளத்தனமாக வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

தொடர்புடைய செய்தி