கீரனூரில் கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் பேரூராட்சி 3வது வார்டில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் தெருவில் உள்ள கழிவறை கடந்த ஏழு மாதங்களாக முள்வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிவறை வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். செயல்பாட்டில் இல்லாத இந்த கழிவறையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
