திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகர் ரவிமோகன் இன்று வருகை தந்தார். மலைக்கோயிலில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்த அவர், பின்னர் போகர் சன்னதியிலும் சிறப்பு வழிபாடு செய்தார். ரவி மோகன் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவரை சூழ்ந்து கைகுலுக்கி, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தரிசனத்தை முடித்த அவர் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்குச் சென்றார்.