பழனி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

4பார்த்தது
பழனி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.