பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட திருமண மண்டபங்கள், பள்ளிகள், உணவகங்கள், தேநீர்க்கடைகள், பேக்கரிகள், சிறு-குறு தொழில் முனைவோர், பஞ்சாமிர்த விற்பனையாளர்கள், அரசு அலுவலகங்கள், விடுதிகள், மடங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் உரிமையாளர்களும் பழநி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து சுகாதாரச் சான்று மற்றும் அபாயகரமான தொழில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறாதபட்சத்தில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன்படி, உரிய பிரிவுகளின் கீழ் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.