பாலசமுத்திரத்தில் தமிழக அரசின் நான்காண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பேரூர்செயலர் சோ. காளிமுத்துவரவேற்றார். தலைமைக்கழகபேச்சாளர் பழனி வேல் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்துக்குபழனி தொகுதி சட்டப் பேரவைஉறுப்பினர் இ. பெ. செந்தில்குமார்தலைமை னவகித்துப் பேசியதாவது: பாலசமுத்திரத்தில் வக்ஃப் வாரிய நிலபிரச்னை காரணமாக சுமார் 93 ஏக்கர் நிலம் பதிவு னசெய்யமுடியாதநிலையில் இருந்துவந்தது. இதையடுத்து, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவுத்துறை ஆணையர், வக்ஃப் வாரியத் தலைவர் ஆகியோரை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசி விளக்கியதன் அடிப்படையில் சுமார்ஐந்தரை ஏக்கர் மட்டுமே வக்ஃப்வாரியத்
துக்குச் சொந்தமானது என பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் அனுப் பப்பட்டது. தற்போதுபிரச்னைக்கு ரிய நிலங்களுக்கான பத்திரப்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் இங் குள்ளபாஜகவினர் வக்ஃப்வாரிய திருத்தச்சட்டம்அமலுக்குவராத நிலையில், இதைதாங்கள்செய்தது போலபேசிவருகின்றனர்.
கொடைக்கானலில்100ஆண்டு காலமாகசாலைவசதிசெய்துதராத கிராமங்களுக்குதற்போதுசாலை வசதிக்காகஅடிக்கல்நாட்டப்பட் டுள்ளது. பழனியில் சுமார் ரூ. 150 கோடியில்சாக்கடைபணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல எண்ணற்ற சாதனைகளைதிமுக அரசுசெய்துள்ளநிலையில், திண்ணைப்பிரசாரம்செய்ய அதிமுகவினருக்கு என்னதகுதி உள்ளதுஎன்றார்அவர்.
கூட்டத்தில், ஒன்றியச்செயலர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.