தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ராணிப்பேட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 40 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியையும், அறச்சலூா் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.