பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நகர துணை தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிளைத் தலைவர்கள் ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ், நகர தலைவர் ஆனந்தகுமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு திமுக அரசை விமர்சித்து உரையாற்றினர்.