திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜெ. சிபிஜெரோ. மும்பை தானேவில், அகில இந்திய 11 வயதுக்கு உட்பட்ட இறகு பந்து போட்டியில், தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டார். மேலும், போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு, கோல்டு மெடல் வென்றுள்ளார். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவனை பெற்றோர், ஆசிரியர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.