கொடைக்கானலில் திடீர் தீ விபத்து

0பார்த்தது
கொடைக்கானலில் திடீர் தீ விபத்து
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த ஒரு பாஸ்ட் புட் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் உண்டாக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி