திண்டுக்கல்: தலைவிக்கு மரியாதை

85பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதிய தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள மருதம் மஹாலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இந்திய விடுதலை போராட்ட தியாகி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, காந்தியடிகளால் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்றும் அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மையாரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலையிடப்பட்டது. 

அவர் தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார். கடனை அடைக்க முடியாமல் வீடு ஏலத்திற்கு வருகையில் அவரது ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டுள்ளனர். அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்பதால் அவரது மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர். 

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் விஜய் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன், நகரத் தலைவர் மிதுன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி