பேரிஜம் ஏரியில் புலிகள் நடமாட்டம்: சுற்றுலாவுக்கு தடை

1151பார்த்தது
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டதால், இன்று (மே 16) காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொப்பி தூக்கிப் பாறை, அமைதி பள்ளத்தாக்கு போன்ற இடங்களை காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புலிகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி