மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கார் சேதம்

0பார்த்தது
மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கார் சேதம்
மேல்மலைக் கிராமமான கூக்காலில், முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த பழமையான யூக்காலி மரம் ஆபத்தான நிலையில் முறிந்து விழுந்தது. இதனால் இரண்டு மின் கம்பங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்தன. இதன் காரணமாக கூக்கால்-பழம்புத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத் துறையினர் மரத்தை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி