சட்டவிரோத சாராய ஊறல் வைத்திருந்த இருவர் கைது

0பார்த்தது
சட்டவிரோத சாராய ஊறல் வைத்திருந்த இருவர் கைது
பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கீரனூர் காவல் சரகப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அக்கரைப்பட்டி கிராமத்தில் காளியப்பன் (63) என்பவரின் நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 5 லிட்டர் ஊறல் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காளியப்பன் மற்றும் உதவியாளர் முருகேசன் (45) கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஊறல் அழிக்கப்பட்டது. இருவர் மீதும் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி