திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் 'நீதிமன்ற உத்தரவு' என்ற பெயரில் கட்சி கொடிகளையும் கல்வெட்டுகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குவதற்கு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அதிகாரிகள் ஒருபட்சமாக கட்சிக் கொடிகளையும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தி வருவதாக டிஎஸ்பி தனஜெயத்திடம் விசிக சார்பில் புகார் மனு அளித்தனர்.