ஆயக்குடி அரசு உயர்நிலை பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைக்க வருகை தந்த பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்குமாருக்கு, கட்சி நிர்வாகிகள் காதலர் தின வாழ்த்துகளை கூறி உற்சாகமாக வரவேற்றனர். அவரும் புன்னகையுடன் நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தார்.