தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பழனி வட்ட கிளை சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி அருகே ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்யவும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை விரைந்து நிறைவேற்றவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.