திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "திருப்பதியைப் போன்ற பெருமைமிக்க பழனி தற்போது குப்பை நகரமாக மாறியுள்ளது. நாளொன்றுக்கு 40,000 பக்தர்கள் வரும் பழனியை, மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தனி மாவட்டமாக அறிவிக்கும், இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்" என்றார். இந்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.