திண்டுக்கல்: கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணிஆணை வழங்கும் விழா

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆண்டிபட்டி, கலையம்புத்தூர், தாமரைக்குளம், பாப்பம்பட்டி உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் 198 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் வழங்கினார். விரைவில் சில தினங்களுக்குள் மேலும் 163 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட பணி ஆணை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1700 குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்டோர் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் வீடு கட்டி பயன் அடைந்துள்ளனர் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி