திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலையில் மரம் வெட்டும் தொழிலாளி இளங்கோ (39) மரக்கட்டை விழுந்து உயிரிழந்தார். திங்கள்கிழமை மகாராஜனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலைக்குச் சென்றபோது, சரக்கு வாகனத்தில் மரக்கட்டையை ஏற்ற முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.