திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா நடத்தினர். மேலும் மாணவர்களுக்கு காடுகளை காப்பாற்றுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.