புதுச்சேரி: இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் தொல்லை.. மாணவர் கைது

1388பார்த்தது
புதுச்சேரி: இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் தொல்லை.. மாணவர் கைது
புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில் தமிழ்நாடு, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அருண் (21) கைது செய்யப்பட்டார். போலி அடையாளத்துடன் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, ஆபாச படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி