
திண்டுக்கல்லில் மயங்கி கிடந்தவர் உயிரிழப்பு
திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே மயங்கிய நிலையில் கிடந்த நாகமணி (செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன்) என்பவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































