வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் 2 வாலிபர் கைது

2பார்த்தது
வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் 2 வாலிபர் கைது
திண்டுக்கல், கொத்தனார் சந்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை மர்ம நபர்கள் மிரட்டி, துன்புறுத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி. பிரதீப் உத்தரவின் பேரில், நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் எஸ்பி. தனிப்படையினர், நகர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி