திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே டீக்கடை நடத்தி வரும் பிரபு என்பவரிடம் கடன் வாங்கிய ராமசாமி (எ) மணிகண்டன் என்பவர் பணத்தைத் திருப்பித் தராததால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தரப்பினர் டீக்கடைக்கு வந்து கடையின் இரும்புக் கம்பிகளை அரிவாளால் வெட்டிச் சேதப்படுத்தினர்.
மேலும் கடையின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சித்ரா என்பவர் அளித்த புகாரின்பேரில் மணிகண்டன், தர்மர், சின்னமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தற்போது கடையில் தகராறு செய்து கடையின் கம்பிவலையை வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.