திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ்டிக்கா (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, சிவராமகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.