XL சூப்பர் வண்டி மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி

1பார்த்தது
XL சூப்பர் வண்டி மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த ஆர்த்தி ஹோட்டல் அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் XL சூப்பர் வண்டி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் XL சூப்பர் வண்டியில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கூம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி