காவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

3பார்த்தது
காவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவலர் எழுத்துத் தேர்வுப் பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி