திண்டுக்கல்: பராமரிக்கப்படும் 3. 80 லட்சம் மலா் செடிகள்

61பார்த்தது
திண்டுக்கல்: பராமரிக்கப்படும் 3. 80 லட்சம் மலா் செடிகள்
திண்டுக்கல் மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலர்ச் செடிகள் சென்னையில் அடுத்த வாரம் தொடங்கும் மலர்க் கண்காட்சிக்காக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

இந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான கண்காட்சி, ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலர்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. 

திண்டுக்கல், கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை சார்பிலும், ரெட்டியார்சத்திரம் இந்தோ இஸ்ரோ காய்கனி மகத்துவ மையத்தின் சார்பிலும் மொத்தம் 3 இடங்களில் மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி