திண்டுக்கல்: திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து

1124பார்த்தது
திண்டுக்கல்: திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலர் எஸ்டி. சாமிநாதன், தனது பண்ணை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டபோது, பொன்னாடையுடன் வந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தினார். திமுகவினர் இளைஞரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், இளைஞர் மணிகண்டன், சாமிநாதனின் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து பணம் முறைகேட்டில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டதும், இதனால் ஆத்திரத்தில் தாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி