திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பிச்சைமுத்து (65), அழகாபுரியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தியுள்ளார். அங்கிருந்து கிளம்பும்போது, பார் ஊழியர் 50 ரூபாய் டிப்ஸ் கேட்டுள்ளார். பிச்சைமுத்து மறுத்ததால் ஆத்திரமடைந்த ஊழியர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது நெஞ்சு, தோள்பட்டை மற்றும் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.