திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் வனத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் செ. சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் வன உயிரினச் சரணாலய 'சூழல் உணர்வு மண்டல' கூர்ந்தாய்வு குழுவின் இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் த. அரவிந்த் மற்றும் வனத்துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். வனத்தீயைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.