திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பர்னிச்சர் கடை நடத்திய சரவணன் என்பவர், பல்வேறு கிராம மக்களிடம் ரூ. 300 என 25 வாரங்கள் வசூலித்தார். அய்யலூரில் பரிசு குழுக்கள் நடத்த ஆயத்தமானபோது, ஏற்கனவே பணம் செலுத்தி பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அங்கு வந்து, குலுக்கல் நடக்காமலும் பொருட்கள் கிடைக்காமலும் ஏமாற்றம் அடைந்ததால் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடமதுரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, சீட்டு குழு நடத்திய சரவணனை கைது செய்தனர்.