வடமதுரை: காதல் திருமணம்.. பெண்ணை கடத்தி சென்ற கும்பல்

1209பார்த்தது
வடமதுரை: காதல் திருமணம்.. பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
வடமதுரை அருகே பிச்சம்பட்டியைச் சேர்ந்த மதுமிதா(19) மற்றும் பெருமாள்(25) காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி, தாடிக்கொம்பு அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து, வேடசந்தூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர், பெருமாளை தாக்கி மதுமிதாவை உறவினர்கள் கடத்திச் சென்றனர். இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களின் தலையீட்டால், டிஎஸ்பி தலைமையில் மதுமிதா மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி